உங்கள் தொகுதியில் முதலமைச்சர் மனு செய்வது எப்படி?
உங்கள் தொகுதியில் முதலமைச்சர் மனு செய்வது எப்படி? ஒருங்கிணைந்த மற்றும் குறைதீர்ப்பு மேலான்…
உங்கள் தொகுதியில் முதலமைச்சர் மனு செய்வது எப்படி? ஒருங்கிணைந்த மற்றும் குறைதீர்ப்பு மேலான் அமைப்பு என்பது இந்த திட்டத்தின் பெயராகும். இதில் நாம் புகார்கள் மற்றும் கோரிக்கைகளை தெரிவிக்கலாம்.
இதானால் மக்கள் தாங்கள் இருக்கும் இடத்திலேயே புகார்கள் மற்றும் கோரிக்கைகளை ஒரே நிமிடத்தில் கொடுக்க முடியும். அது மட்டும் இல்லாமல் இந்த துறை நேரடியாக முதலமைச்சரின் கட்டுபாட்டின் கீழ் இயங்குவதால் உங்கள் புகார் மற்றும் கோரிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கபடுகிறது.
உங்கள் தொகுதியில் முதலமைச்சர் மனு செய்வது எப்படி?
https://cmhelpline.tnega.org/ இந்த வலைத்தளத்தில் சென்று தங்கள் புகார் மனுக்களை பதிவு செய்யலாம்.
- குறைகளை எந்த நேரங்களிலும் பதிவு செய்யலாம்
- புகார் மனுக்கள் எந்த நிலையில் உள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்
- மேலும் தங்கள் கருத்துக்களை பதிவிடல்லாம்
- முதலமைச்சரின் அறிக்கைகளை காணலாம்
மேலும் இந்த சேவைகளை தடையில்லாமல் பயன்படுத்த வழிமுறைகள் உருவாக்க பட்டுள்ளன அவை கட்டணமில்ல தொலைபேசி 11௦௦ சேவை மற்றும் இணையதள சேவை, செயலி, email சேவைகள் ஆகும்.
மேலும் படிக்க:ஆதர் கார்டு டவுன்லோடு செய்வது எப்படி?
எவ்வாறு உங்கள் தொகுதியில் முதலமைச்சர் மனு செய்வது?
- இந்த இணையதளத்தை ஓபன் செய்து தங்கள் தொலைபேசி பதிவெண் அல்லது மின்னஞ்சல் மூலமாக பதிவு செய்து கொள்ளவும்.
- தொலைபேசி அல்லது மின்னஞ்சல் மூலமாக பெறப்பட்ட கடவுசொல்லை பயன்படுத்தி இணையதளத்தின் உள்நுழையவும்.
- புகார்களை பதிவிட மனு செய் என்ற இடத்தை கிளிக் செய்யவும்.
- பின்னர் திரையில் தொடு என்ற இடத்தை கிளிக் செய்யவும்
- தங்கள் மனு உரிய அரசு அலுவலர்களுக்கு ஒன்றிணைக்கப்பட்டு மனுவின் நிலையை குறுஞ்செய்தி வாயிலாக தெரிவிக்கப்படும்.