Ulunthu thailam Health Benefits In Tamil உளுந்து தைலம் உளுந்து மற்றும் உளுந்தம்பருப்பில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு பாரம்பரிய ஆயுர்வேத மூலிகை மருந்தாகும். இந்த தைலம் பல நூறு ஆண்டுகளாக இந்தியாவில் உபயோகத்தில் உள்ளது. இந்த கட்டுரையில் உளுந்து தைலத்தின் மருத்துவ பயன்களை காணலாம்.
தேவையற்ற வீக்கத்தை குறைக்கிறது ( Reduce Inflammation )
உளுந்து தைலத்தில் உள்ள அதிக Anti-inflammatory சேர்மங்கள் மூட்டுவலி மற்றும் அழற்சி தொடர்பான நோயய்களுக்கு இது சிறந்த மருந்தாக உள்ளது அதன் அழற்சி எதிர்ப்பு பண்புகள் பூச்சிக்கடி மற்றும் சிறிய காயங்களால் ஏற்படக்கூடிய சிவத்தல், வீக்கம், வலி ஆகியவற்றை குறைக்க உதவுகிறது.
சிறந்த வலிநிவாரிணி .. Ulunthu thailam Health Benefits In Tamil
இது காயங்களை குனபடுத்த உதவுகிறது மற்றும் கிருமி நாசினியாகவும், நுண்ணுயிர் எதிர்ப்பு ஆற்றல்களையும் கொண்டுள்ளது. மேலும் தொற்றுநோய்களை தடுப்பது மற்றும் சிறிய வெட்டுகளால் ஏற்படக்கூடிய காயங்கள், வீக்கங்களையும் குறைக்கும் சக்தி இந்த உளுந்து தைலத்திற்கு உள்ளது.
சருமத்தை அழகாக்குகிறது
உளுந்து தைலத்தில் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் மற்றும் Antioxidants அதிகம் உள்ளன, இது வறண்ட அரிப்பு தோல்களை குனபடுதவும், தோள்களில் ஏற்படும் சுருக்கங்களை குறைத்து இளமையான தோற்றத்தை நீடிக்க உதவுகிறது .
சளியில் இருந்து விடுதலை
சளி, ஒவ்வாமை மற்றும் சைனஸ் தொற்றுகளால் ஏற்படும் மூக்கடைப்பை போக்க உளுந்து தைலத்தை பயன்படுத்தலாம் ஒரு சிறிய அளவு தைலத்தை மார்பில் தடவி , தைலத்தின் வாசனையை சுவாசிக்கவேண்டும்
எப்படி பயன்படுத்துவது
இந்த தைலத்தை பயன்படுத்துவது மிகவும் எளிமையானது, உடலில் பாதிக்கபட்ட இடத்தில் ஒரு சிறிய அளவில் தைலத்தை தடவி மசாஜ் செய்யவும். தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு பயன்படுத்தினால் சிறந்த பயன்களை பெறலாம். உளுந்து தைலம் பாதுகாப்பானது என்றாலும் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம் .
உடைந்த தோல் மற்றும் பெரிய காயங்களில் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அரிப்பு மற்றும் சொறி போன்ற பாதிப்புகளை சந்திக்க நேர்ந்தால் உடனே தைலத்தை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும்.
சாமை அரிசி பயன்கள் … Samai Arisi Benefits in tamil
பல்வேறு பயன்கள்
உளுந்து தைலம் பல்வேறு வலிகளுக்கு இயற்கையான மற்றும் பயனுள்ள தீர்வாகும். இதன் அழற்சி எதிர்ப்பு, வலி நிவாரிணி மற்றும் நோய் எதிர்ப்பு பண்புகள் சிறிய காயங்கள் மற்றும் கீறல்கள் முதல் கீல்வாதம், தலைவலி வரை அனைத்திற்கும் சிகிச்சையாக அமைகிறது மேலும் உங்கள் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது .
கெமிக்கல் கலந்த வலி நிவாரணிகளை பயன்படுத்துவதற்கு மாற்றாக இயற்கை வழிகளை பயன்படுத்த விரும்பினால் உளுந்து தைலத்தை பயன்படுத்தலாம்.