echchil vilunkum pothu thondai vali

எச்சில் விழுங்கும் போது தொண்டை வலி

எச்சில் விழுங்கும் போது தொண்டை வலி வைரஸ், பாக்டீரியா தொற்று மற்றும் ஒவ்வாமை, தொண்டைப்புண், வறண்ட…

எச்சில் விழுங்கும் போது தொண்டைவலிவைரஸ், பாக்டீரியா தொற்று மற்றும் ஒவ்வாமை, தொண்டைப்புண், வறண்ட காற்று போன்ற காரணங்களால் ஏற்படலாம்.

எச்சில் விழுங்கும் போது தொண்டை வலி ஏற்படக் காரணங்கள்

வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்று

தொண்டை புண் உண்டாவதற்கு பொதுவான காரணம் ஜலதோஷம் , காய்ச்சல் மற்றும் ஸ்ட்ரெப் போன்ற வைரஸ் அல்லது பாக்டீரியா தொற்று ஆகும்.

இந்த நோய்த்தொற்றுக்கள் தொண்டையில் வீக்கம் மற்றும் எரிச்சலை உண்டாக்கும், மேலும் நீங்கள் விழுங்கும் பொழுது வலியை ஏற்படுத்தும்.

ஆசிட் ரிப்லக்ஸ்

இது இரைப்பை உணவுக்குழாய் ரிப்லக்ஸ் (GERD) என்றும் அழைக்கபடுகிறது. இது வயிற்று அமிலம் மீண்டும் தொண்டைக்குள் வரும்போது தொண்டைப்புண் ஏற்படும். இதானல் தொண்டையின் உட்புறம் எரிச்சல் அடைந்து விழுங்கும் பொழுது வலியை ஏற்படுத்தும்.

ஒவ்வாமை

ஒவ்வாமை தொண்டையில் அழற்சியை ஏற்ப்படுத்தி, விழுங்கும்போது தொண்டையில் புண்களை ஏற்படுத்துகிறது. இது தூசி , மகரந்தம் மற்றும் செல்லப் பிராணிகளின் தோல் போன்ற பல்வேறு காரணங்களால் ஒவ்வாமை உண்டாகுகிறது.

வறண்ட காற்று

வறண்ட காற்று தொண்டையில் எரிச்சலை உண்டாக்கி தொண்டை புண் மற்றும் விலுங்கிதலில் சிரமங்களை உண்டாக்குகிறது. குளிர் காலங்களில் உட்புற வெப்பம் காற்றை உலர்த்தும் பொது இது பொதுவாக ஏற்படுத்துகிறது.

தொண்டை காயம்

கூர்மையான மற்றும் சூடான உணவை உண்ணும்போது தொண்டையில் ஏற்படக்கூடிய காயம் விழுங்குவதில் வலியை ஏற்படுத்தும்.

பனை கிழங்கு நன்மைகள் … Panai Kilangu Helath Benefits In Tamil

தொண்டை வலியை போக்க சில இயற்கை வைத்தியங்கள்

உப்புநீர்

வெதுவெதுப்பான உப்புநீருடன் வாய் கொப்பளிபதினால் தொண்டையில் வீக்கம் மற்றும் வலியை குறைக்க உதவுகிறது. ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் கால் அல்லது அரை டீஸ்பூன் உப்பு கலந்து முப்பது வினாடிகள் வாயை கொப்பளிக்க வேண்டும்.

தேன்

தேன் பாக்டீரியா எதிர்ப்பு குணங்களை அதிகம் கொண்டுள்ளதால் தொண்டை புண்களை ஆற்ற உதவுகிறது. ஒரு டீஸ்பூன் தேனை வெதுவெதுப்பான நீர் அல்லது தேனீருடன் கலக்கி பருகலாம் அல்லது ஒரு ஸ்பூன் தேனை பருகலாம்.

இஞ்சி தேனீர்

இஞ்சியில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகம் உள்ள காரணத்தால் தொண்டையில் உள்ள புண்களை போக்க உதவுகிறது. இஞ்சியை சில துண்டுகளாக வெட்டி பத்து நிமிடங்கள் தண்ணீரில் கொதிக்கவைத்து, தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து பருகவும்.

நீராவியை உள்ளிலுத்தல்

நீராவியை உள்ளிப்ப்பதால் எரிச்சலை குறைத்து தொண்டை புண்களை ஆற்றவும் உதவுகிறது. ஒரு பாத்திரத்தில் தண்ணிரை கொதிக்க வைத்து, நீராவியை பிடிக்க தலைக்கு மேல் துண்டுடன் பாத்திரத்தின் மேல் சாய்ந்து கொண்டு பத்து நிமிடங்கள் ஆழமாக சுவாசிக்க வேண்டும்.

தொண்டைப்புண் சில நாட்களுக்கு மேல் ஆறாமல் நீடித்தால் மற்றும் காய்ச்சல், சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகளுடன் இருந்தால் மருத்துவரிடம் பரிசோதிப்பது நல்லதாகும்.

Similar Posts